×

பஸ் மோதி காயமடைந்த ரிக்‌ஷா ஓட்டுனருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு

சென்னை: சென்னையை சேர்ந்தவர் ராஜா. இவர், தாம்பரத்தில் ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டி கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில், ராஜா கடந்த 2014ம் ஆண்டு, பெருங்கொளத்தூரில் இருந்து தாம்பரத்துக்கு சவாரி ஏற்றி  வந்தார். அப்போது, அந்த வழியே கட்டுபாட்டை இழந்து வேகமாக வந்த சென்னை மாநகராட்சி பேருந்து ராஜா மீது மோதியுள்ளது. இதில் அவரது இடுப்பில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, ராஜா பலத்த காயமடைந்ததால், வேலைக்கு செல்ல முடியவில்லை என்று கூறி, சென்னையில் மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, எம்.டி.சி நிர்வாகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘‘விபத்துக்கு ரிக்‌ஷா ஓட்டுனர் ராஜா தான் காரணம். மேலும் அவர் கேட்டுள்ள இழப்பீடு மிகவும் அதிகமானது. எனவே, இழப்பீடு ஏதும் வழங்காமல் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’’ என்று கூறினர். இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி, ‘‘விபத்து ஏற்பட்டதால் ராஜா வேலைக்கு செல்ல முடியாமல் அவதியடைந்து வருவதாகவும். அவரது இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி ராஜாவுக்கு ₹2 லட்சத்து 33 ஆயிரம் இழப்பீடு வழங்க கோரி எம்.டி.சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : rickshaw drivers , Auto rickshaw, Rs 2 lakh compensation, bus jail injuries
× RELATED சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 3...